இலங்கை கிரிக்கட்

இந்தியாவைப் போலல்லாமல் இலங்கை அணி தாயகம் திரும்பியதும் பலமான வரவேற்பு வழங்கி கெளரவிக்கப்பட்டது. வெற்றியோ தோல்வியோ அவர்கள் கடைசிவரை போராடியமை இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது.

இங்கே டோனி வீட்டு சுவரை இடிப்பது போல ஜயசூர்யா வீட்டுச் சுவரை உடைப்பதில்லை, கங்குலி வீட்டுக்கு கல்லெறிவது போல முரளி வீட்டுக்கு கல்லெறிவதில்லை.

கீழே உள்ளது இலங்கை அணியைப் பாராட்டி பாத்தியா சத்துஸ் என்ற பாடகர்கள் பாடிய பாடலை போட்டுள்ளேன் பாருங்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடல் வருகின்றது!!!

7 thoughts on “இலங்கை கிரிக்கட்”

 1. அது என்ன இந்தியா போல் அல்லாமல், இலங்கை அணி என்ன இந்திய அணி போல் முதல் சுற்றிலேயே தோற்றதா என்ன? இந்தியாவை ஏன் இழுக்கறீங்க? எங்க நாட்டில் கிரிக்கெட் ஒரு மதம் மாதிரி.

 2. நல்ல நிகழ்படம்+இசை.

  இந்தியால இறுதிப் போட்டில தோத்தப்ப நாங்களும் மதிப்புடன் தான் நடத்தினோம்னு நினைக்கிறேன்..

  ஆனா, இந்தியா அளவுக்குக் கேவலமா துவக்கச்சுற்றுலயே தோத்திருந்தா அப்பவும் நீங்க அமைதியா தான் இருந்திருப்பீங்களா? ரொம்ப நல்லவங்ங்ங்களா இருப்பீங்க போல 🙂

 3. எல்லாஞ்சரி, இலங்கை அணி வெண்றால் பாதுகாப்பு நிதிக்குப் பெருந்தொகை குடுக்கப் போவதாக அறிவ்த்தார்களே? அதுபற்றி உங்களிடம் விமர்சனங்களே இல்லையா?

  shame on you

 4. //அது என்ன இந்தியா போல் அல்லாமல், இலங்கை அணி என்ன இந்திய அணி போல் முதல் சுற்றிலேயே தோற்றதா என்ன? இந்தியாவை ஏன் இழுக்கறீங்க? எங்க நாட்டில் கிரிக்கெட் ஒரு மதம் மாதிரி.//
  பொதுவாக இலங்கையிலும் கிரிக்கட் வெறியர்கள்தான்… ஆனால் இவர்கள் தங்கள் அணி தோற்றாலும் வரவேற்கத் தவறுவதில்லை..!!!
  வரவேற்காவிட்டாலும், வரவைத்து தண்ணி காட்ட மாட்டார்கள்!!! 🙂

 5. ரவி.. இந்த உதவிக்கு நன்றி!! 🙂

  அப்புறம்… சந்தோஷூக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும்!!! 😉

 6. //எல்லாஞ்சரி, இலங்கை அணி வெண்றால் பாதுகாப்பு நிதிக்குப் பெருந்தொகை குடுக்கப் போவதாக அறிவ்த்தார்களே? அதுபற்றி உங்களிடம் விமர்சனங்களே இல்லையா?//
  இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது!!!!

  நான் இங்கு அரசியல் பேசவரவில்லையப்பா!!!

  //shame on you//
  நான் என்னை நினைத்து வெட்கப்படவில்லை!!!!. நான் இலங்கை அணிக்கு வக்காளத்து வாங்கவில்லையே??? இலங்கையில் நடப்பதைக் கூறினேன் அவ்வளவுதான்!!!

Leave a Reply