இக்கடச் சூடு சிவாஜி!!

எல்லாரும் பார்த்து முடித்து இரண்டாம் தடவை மூண்றாம் தடவையும் பார்த்தபின்பு கடந்த சனிக்கிழமை அடியேனும் சிவாஜியின் தரிசனத்தைப் பெற்றுக்கொண்டேன். Smiley

 

படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்வதானால் பிரமாண்டம் பிரமாண்டம் பிரமாண்டம் என்பதேயாம். ரஜனியின் வயதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அட அட அட என்ன ஒரு வேகம் என்ன ஒரு நடை. வயதானாலும் ஸ்டைலு மட்டும் இன்னும் குறையவே இல்லை என்று நீலாம்பரி சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகின்றது.

 

ஆரம்பக் காட்சியில் ஒரு முகம் மூடப்பட்ட நபரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்கின்றார்கள். அழைத்துச் செல்லும் வழியில் மக்கள் மிகவும் அல்லோல கல்லோலப் படுகின்றார்கள். இந்தக் காட்சியில் எனக்கு சங்கரின் முத்திரை அப்படியே தெரிகின்றது. அதாவது முதல்வன் படத்திலும் இது போன்ற காட்சிகள் வருகின்றன.

 

கதை மிகவும் சுருக்கமானது, அதைப் பிரமாண்டமாக்கி சூப்பர் ஸ்டாருக்கு ஏற்ற வகையில் அமைத்து சங்கர் திரைப்படத்தை வழங்கியுள்ளார். அமெரிக்கா சென்று செல்வந்தரான சிவாஜி தாயகம் திரும்பி தன் நாட்டுக்கு நல்லது செய்ய விரும்புகின்றார். இவர் நல்லது செய்யவிடாமல் சிலர் தடுக்கின்றனர். இவர் நல்லது செய்தாரா இல்லையா என்பதே மிகுதிக்கதை. இதற்குள் கறுப்புப்பணம், வெள்ளைப் பணம் கொன்செப்டுகளும் வருகின்றது. இந்தக் கதையை ஊகிப்பதற்கு உங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்காது. ஆனாலும் யாருக்கு அதைப் பற்றிக் கவலை. திரையில் வேகமாக நகரும் காட்சிகளை பார்த்து அனைத்தையும் மறந்துவிடலாம்.

 

பாடல்கள் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. திரைகாட்சிகள், செட்கள் என்பன கண்களைப் பறித்துவிடுமளவிற்கு உள்ளன. சண்டைக் காட்சிகளைப் பார்க்கும் போது தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது என்று எண்ண வைக்கின்றது. பீட்டர் ஹெய்ன் கற்பனைக் குதிரையை ஓடவிட்டு சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகள் ஜக்கிசானின் படத்தை நிச்சயமாக நினைவூட்டும். ஓடி ஓடி பின்னால் துரத்துபவர்களைத் தாக்குவது ஜக்கி சானின் ஸ்டைல்தானே?. கடுப்பேற்றும் ஒரு விடயம், ஒருவர் இருபது நபர்களை அடிக்கும் ஃபோமுலாவை என்று விடுவார்கள் என்பதுதான்.

 

முதலாவது பாடலான பல்லேலக்காவில் வரும் நாயன்தாரா அழகில் மிளிர்கின்றார். அது சரி.. ரஜனி இப்படிப் இடுப்புத்தெரிய ஓடிவரும் பெண்ணையா சுத்தத் தமிழ் மணம் வீசும் பெண் என்று சொல்கின்றார்????. ஸ்ரேயா அம்பு வில்லுப் போல் வளைகின்றார், நெளிகின்றார், நிமிர்கின்றார். அவர் கண்கள் ஆயிரம் கதை பேசுகின்றன, பார்வையிலேயே போதை ஏற்றுகின்றார். வாஜி.. வாஜி… பாடலில் அழகின் உச்சக் கட்டத்தை ஸ்ரேயா எட்டியதாகத் தோண்றுகின்றது. ஏதோ இவருக்கு தமிழில் பெரும் புள்ளியாகும் வாய்ப்பு உள்ளதாகவே எனக்கு படுகின்றது.

 

 

ரஜினி தன் பாட்டுக்கு பாடலுக்குப் பாடல் புதுப் புது கெட்டப்பில் வருகின்றார். இவரின் வயதை என்னால் நம்பவே முடியவில்லை.!!!! 😉

 

சிவாஜி நகைச்சுவைக் காட்சிகளில் புகுந்து விளையாடுகின்றார். குறிப்பாக வெள்ளையாக முயற்சிக்கும காட்சிகள். பின்பு வெள்ளையாகி வருவார் பாருங்கள்… கடவுளே.. வெள்ளைக்கார வெள்ளை…!!! சங்கரின் கற்பனைக்கு எல்லையே இல்லை போங்கள்.. 🙂 . அந்த காட்சியைப் பார்த்து என்நிறமுடையோர் சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். விவேக் தன் பாட்டுக்கு பஞ் டயலாக்குகள் வைத்து சிரிப்பூட்டுகின்றார். சில இடங்களில் நகைச்சுவை என்ற பெயரில் கொஞ்சம் அலுப்பும் அடித்துள்ளார்கள். உதாரணமாக சாலமன் பாப்பையாவின் மகள்களை கறுப்புப் பூசிக் காட்டியது. சிரிப்புக்குப் பதிலாக வெறுப்பூட்டுகின்றது.

 

விவேக் ஒரு கட்டத்தில் சொல்லுவார்.. தமிழ் நாட்டில் இரண்டு விடயம் பற்றிப் பேசக்கூடாது ஒன்று கறுப்பு மற்றது கற்பு..!!!

 

நகைச்சுவை, அதிரடித் திருப்பங்கள், அன்பு, காதல் அனைத்தும் அடுத்து அடுத்து மாறி மாறி வருவது படத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டுகின்றது.

 

 

A grand visual spectacle, Watch it and freak out!

7 thoughts on “இக்கடச் சூடு சிவாஜி!!”

 1. என்னடா இது ரொம்பநாளா இந்த பக்கம் ஆள் நடமாட்டத்தையே காணமேன்னு பாத்தேன்,
  இப்பத்தானே தெரியுது மயூர் சிவாஜி பாக்க போயிட்டாருன்னு.

  சிவாஜி நிறைய எதிர்பார்ப்புகளை தூண்டி விட்டு வந்த படம்.
  வசூலிலும் சாதனை புரிந்துள்ளது.

  என்னுடைய கருத்து – ரஜினி ரஜினியாக நடித்திருக்கலாம்
  வடிவேலு, சிவாஜி, எ.ம்.ஜி யாரை மாதிரி நடித்திருக்க வேண்டாம்.

  மத்தபடி தலைவர் படம் cool man cool
  Superstar superstar தான்.

 2. நன்றி சாமி.. உங்கள் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்..
  எனக்குப் படத்தில் பிடித்தது… இரஜனியின் ஸ்டைலும், சங்கரின் பிரமாண்டமும், ரகுமானின் இசையும்தான்… இதில் ஒன்று குறைந்திருந்தாலும் படம் மட்ட இரகமாகியிருக்கும்!!!!

 3. என்னைப் போறுத்தவரை தமிழிற்குத்தேவையில்லாத படமொன்று.

  படத்தின் முதலரைவாசி நகைச்சுவை என்கின்ற பேரில் நாற அடித்திருக்கிறார்கள். இத்து, உக்கி, நாத்தமடிக்கின்ற நகைச்சுவைகள்!!

  பாடல் காட்சிகள் படங்களின் கதையோட்டத்திற்கு முட்டுக்கடை என்று எங்கள் தமிழ் மக்கள் எப்போது உணரப்போகிறார்களோ தெரியாது. அப்படியிருக்கையில் படதிற்கான செலவழிப்பில் 90%ஐ பாடல்களில் கொட்டும் சங்கரை postல கட்டிவச்சு சுடவேணும்!!

  (அப்பிடியே தமிழை கொல்லுறதுக்கெண்டே இருக்கிற உந்த உதித் நாராயண்ணையும் ஆராவது மண்டையில போட்டால் நல்லம்!!)

  “Newton commits suicide” என்று ஒரு email உலாவித்திரிந்தது எல்லாருக்கும் தெரியும். பகிடி, பகிடி எண்டு பாத்தால் கடைசியா அதை உண்மையாவே ஆக்கிவிட்டாங்கள்!! ஆண்டவா!!

  சுருக்கமா சொல்லப்போனா, சிரயாவின்ரை இடையையும், ரஜனியின்ரை நடையையும் தவிர படத்தில ஒண்டுமேயில்லை.

 4. நீங்கள் சொல்வதிலும் அர்த்தம் உள்ளது
  ஆனால் எங்கள் தமிழர்களுக்கு இது எந்தளவிற்கு உறைக்கும் என்று தெரியவில்லை.

 5. //படதிற்கான செலவழிப்பில் 90%ஐ பாடல்களில் கொட்டும் சங்கரை postல கட்டிவச்சு சுடவேணும்//

  சரியான வார்த்தை. 100த்துல ஒன்று. மட்டமான படம்

 6. ஆமாம் மயூர், ஏன் post எல்லாம் இப்பொ குறைச்துவிட்டாய்.
  வேலை கிடைச்துவிட்டதா

Leave a Reply